வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (22/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (22/10/2018)

எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்! - 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்திய எல்லையான ராஜுவுரி, லால்யாலி  ராணுவ தளத்தின் அருகே உள்ள சுந்தர்பன் செக்டரில் ஞாயிற்றுக்கிழமை பகல் 1.45 மணி அளவில் ஊடுருவிய பாகிஸ்தான் எல்லை ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், பாகிஸ்தான் வீரர்கள் இருவரும், இந்திய வீரர்கள் மூவரும் உயிரிழந்தனர். இந்திய வீரர் ராகேஷ் குமார் படுகாயமடைந்து உத்தம்பார்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை அபாய கட்டத்ந்த் தாண்டியிருப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது.

எல்லை

உயிரிழந்த ராணுவ வீரர்கள் கௌஷல் குமார், ரஞ்ஜித் சிங்க், ரஜத் குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். முன்னதாக, ஊடுருவல்காரர்கள், பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தான் அதிரடிப்படை வீரர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சண்டை நடைபெற்ற பகுதியை சுற்றிவளைத்து சோதனையை மேற்கொண்டுவருகிறது ராணுவம். மேலும், தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து AK 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.