வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (23/10/2018)

கடைசி தொடர்பு:14:36 (23/10/2018)

காவலரால் சுடப்பட்ட நீதிபதி மகன் மரணம் - நீதிபதி செய்த பாராட்டத்தக்க செயல்

டெல்லி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணகாந்த் சர்மா இவரின் மனைவி ரிது கார்க் (வயது 38), மகன் துருவ் (வயது 18), இவர்கள் இருவரும் கடந்த 13 ம் தேதி டெல்லி அற்சடை மார்க்கெட்டுக்கு ஷாப்பிங் சென்றுள்ளனர். இவர்களின் பாதுகாப்பு போலீஸ்காரர் மகிபால்சிங் உடன் சென்றுள்ளார். அப்போது திடீரென அவர்கள் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர் நீதிபதிக்கு போன் செய்து உங்கள் மனைவி மற்றும் மகனைச் சுட்டு விட்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த ரிது கார்க் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நீதிபதி மகன்

போலீஸார் அவரிடத்தில் நடத்திய விசாரணையில், நீதிபதி மனைவி மற்றும் மகன் பேசியதில் கோபமடைந்து, தன்னிலை இழந்து அவர் கண் இமைக்கும் நேரத்தில் அவர்களைச் சுட்டதாகத் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் தலையிலும், தோள்பட்டையிலும் சுடப்பட்ட நீதிபதி மகன் துருவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது சிகிச்சை பலனின்றி துருவ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து நீதிபதி க்ரிஷ்ணகாந்த் இறந்த தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.