வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (25/10/2018)

கடைசி தொடர்பு:16:10 (25/10/2018)

தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு 600 கார்கள் - அசத்தும் நிறுவனம்!

குஜராத்தில், சூரத் நகரில் இருக்கும் ஸ்ரீ ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் எனும் வைரம் அறுக்கும் நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல வைர வியாபாரியுமான சாவ்ஜி டோலக்கியா, தீபாவளி போனஸாகத் தனது தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 600 கார்களை பரிசாகத் தரவிருக்கிறார். இந்தச் சலுகைக்குத் தகுதிபெற்ற 1,500 பேரில், 900 பேர் வாய்ப்பு நிதியாகத் தங்கள் தொகையைத் தருமாறு கோரியிருந்தனர். அவர்களுக்கு வாய்ப்பு நிதியும், மற்ற 600 பேருக்கு காரும் அளிக்கிறார் சாவ்ஜி. இதற்காக அவர் 50 கோடி செலவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

தீபாவளி

கூடுதல் சிறப்பாக, நிறுவன ஊழியர்கள் நால்வர், டெல்லிக்கு நேரில் சென்று பிரதமர் மோடியின் கைகளில் இந்தத் தீபாவளி போனஸை பெறுகின்றனர். மேலும், அவர் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் அந்த நிறுவன ஊழியர்களிடையே உரையாற்றுகிறார். மூன்று வாரங்களுக்கு முன்னர் அந்நிறுவனத்தில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றிய ஊழியர்கள் மூவருக்கு சாவ்ஜி டோலக்கியா, பென்ஸ் கார் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடங்களில், அவர் இதேபோல தீபாவளி போனஸாக, அவரின் ஊழியர்கள் 700-க்கு மேற்பட்டவர்களுக்கு வீடும், 500-க்கு மேற்பட்டவர்களுக்கு வைர நகைகளும் பரிசாக வழங்கினார்.