வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (25/10/2018)

கடைசி தொடர்பு:15:47 (25/10/2018)

விசாகப்பட்டினம் ஏர்போர்ட்டில் ஜெகன் மோகன் ரெட்டியைப் பதறவைத்த இளைஞர்!

செல்ஃபி எடுக்க அனுமதித்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தினார்.

ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்

விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஜெகன் மோகன் ரெட்டி வந்தார். விமானநிலையத்தில் பாதுகாப்பு வளையத்தை மீறி இளைஞர் ஒருவரை தன் அருகில் அனுமதித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருடன் பேசிய அந்த இளைஞர், `அடுத்த ஆண்டு தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்'  என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னர், ஜெகன் மோகன் ரெட்டியுடன் செல்ஃபி எடுக்க விரும்பியுள்ளார். செல்ஃபிக்கு அனுமதித்த தருணத்தில் அந்த இளைஞர் தன் கையில் வைத்திருந்த நகவெட்டியின் பிளேடு போன்ற கூர்மையான பகுதியைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இளைஞரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். 

இளைஞர் தாக்கியதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது கையில் கீறல் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இந்தச் சம்பவத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ரோஜா செல்வமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். `நகவெட்டியுடன் இளைஞர் விமானநிலையத்துக்குள் வந்தது எப்படி' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சந்திரபாபு நாயுடு அரசு ஜெகன் மோகன் ரெட்டியின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டுவதாகவும் ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். 

 தாக்குதல் நடத்திய இளைஞரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க