வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (25/10/2018)

கடைசி தொடர்பு:23:30 (25/10/2018)

வாட்ஸ்அப், ட்விட்டரில் வதந்திகளைத் தடுக்க மத்திய அரசு உத்தரவு!

நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செய்திகள் பரப்பப்பட்டால் அதுகுறித்து விசாரணை செய்ய ஓர் அமைப்பு வைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களை அரசாங்கம் கேட்டுள்ளது. வதந்திகள், வெறுப்புச்செய்திகள் போன்றவற்றைப் பரப்புவதற்கு தங்களது தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்படுகின்றன என்று சில சமூக ஊடக நிறுவனங்கள் கூறியுள்ளன.

வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேசியப் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வதந்திகளைப் பரப்புவதையும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் வன்முறைகளைத் தூண்டும் விதமாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் பல்வேறு செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான இணையதளங்களின் தலைமையிடங்கள் வெளிநாடுகளில் இருக்கின்றன. வாடிக்கையாளர்களின் தனியுரிமைக் கொள்கைகளைக் காரணம்காட்டி, அவர்கள் குறித்த விவரங்களையும், அவர்கள் பகிரும் செய்திகளையும் அளிப்பதற்கு இந்த இணையதளங்கள் மறுக்கின்றன.

வாட்ஸ்அப்


நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செய்திகள் பரப்பப்பட்டால் அதுகுறித்து விசாரணை செய்ய ஓர் அமைப்பு வைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களை அரசாங்கம் கேட்டுள்ளது. வதந்திகள், வெறுப்புச்செய்திகள் போன்றவற்றைப் பரப்புவதற்கு தங்களது தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்படுகின்றன என்று சில சமூக ஊடக நிறுவனங்கள் கூறியுள்ளன. 

சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், யூனியன் உள்துறைச் செயலாளர் ராஜீவ் கௌபா பேசும்போது, ``இந்தியாவைச் சேர்ந்த குறைதீர்க்கும் அதிகாரியின் மேற்பார்வையில், ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை அகற்றுவதற்கான காலக்கெடு, தடுப்பு மற்றும் பிற நடவடிக்கைகளுக்கான கண்காணிப்புக் கருவிகளை உருவாக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். இந்தக் கூட்டத்தில் ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களின் பிரதிநிதிகள், தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள், பாதுகாப்பு ஏஜென்ஸிகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள்.