வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (29/10/2018)

கடைசி தொடர்பு:20:40 (29/10/2018)

களைகட்டும் தீபாவளி விற்பனை - ஃப்ளிப்கார்ட், அமேசான் பெருகும் தற்காலிக வேலைவாய்ப்பு!

ஆன்லைன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இரண்டும், தீபாவளி மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கால விற்பனைக்காகக் கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு ஆட்களைப் பணிக்கு அமர்த்தவுள்ளன. இந்த ஆண்டு ஆன்லைன் விற்பனைக்கு டெலிவரி செய்ய 66% கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனையில் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருள்களுக்கு இருக்கும் அதிக வரவேற்பின் காரணமாக, இந்த ஆண்டு இரண்டு லட்சம் பேர் வரை தற்காலிக வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

பண்டிகை


கடந்த இரண்டு ஆண்டுகளாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஆள் பற்றாக்குறையால் விற்பனையில் சிக்கலைச் சந்தித்துவந்தது. ஆனால், தற்போது வால்மார்ட் நிறுவனத்தின் பண பலம் இணைந்திருப்பதால், துணிந்து அதிரடி விற்பனையில் இறங்கியுள்ளது. எனவே, கடந்த ஆண்டைவிட இரு மடங்கு விற்பனையை இலக்காகக்கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்த ஆண்டு, அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் இரண்டும், பண்டிகைக்கால தொடக்க விற்பனையான கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல், பிக் பில்லியன் டேஸ் விற்பனையின்போதே, இந்தியா முழுமைக்கும் 80,000 தற்காலிகப் பணியாளர்களைப் பணியில் ஈடுபடுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.