வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (29/10/2018)

கடைசி தொடர்பு:22:10 (29/10/2018)

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு - புதிய முயற்சியில் உச்ச நீதிமன்றம்!

டெல்லியின் காற்று மாசுபாட்டைத் தடுக்க உச்ச நீதிமன்றம், மத்திய மாசுக் கட்டுப்பட்டு வாரியத்துக்கு அளித்துள்ள உத்தரவின்படி, ஒரு புது சமூக வலைதள கணக்கைத் தொடுங்குமாறு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில், காற்று மாசுபாட்டில், வேகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நகரமாகத் தலைநகர் டெல்லி இருக்கிறது மனிதர்கள் சுவாசிக்கத் தகுதி அற்ற காற்றாக நம் தலைநகரின் காற்று மாறிவருகிறது. சில தினங்களுக்கு முன்னர், டெல்லியின் காற்று மாசுபாடு அபாய நிலையை அடைந்திருப்பதாக சிவப்பு அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

காற்று

டெல்லியின் அதீத வாகனங்களின் எண்ணிக்கை, நிறையத் தொழிற்சாலைகளின் இயக்கம் என இதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. முகமூடி அணிந்து கிரிக்கெட் விளையாடும் நிலை முதல், பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறை வரை காற்று மாசுபாட்டினால் டெல்லி பல இன்னல்களைச் சந்தித்துவருகிறது. தற்போது, இந்நிலையைச் சமாளிக்க உச்ச நீதிமன்றம் புதிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது . 

அதன்படி, உச்ச நீதிமன்றம் மத்திய மாசுக் கட்டுப்பட்டு வாரியத்துக்கு அளித்துள்ள உத்தரவின்படி, ஒரு புது சமூக வலைதளக் கணக்கைத் தொடுங்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதன்மூலம், மக்கள் தங்கள் குறைகளை எளிதாக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும் வகை செய்யுமாறு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்கள் மற்றும்  15 ஆண்டுகளுக்கு முந்தைய பெட்ரோல் வாகனங்களின் விவரப் பட்டியலை வெளியிடுமாறு டெல்லி போக்குவரத்துத் துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் அந்த வாகனங்களைக் கையகப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.