`ஷேவிங்; ஊட்டிவிடுதல்; குளிப்பாட்டல்’ - தேர்தலுக்காக தெலங்கானா வேட்பாளர்கள் செய்யும் அட்டூழியம்! | barber to washing clothes, TRS candidates Pranks

வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (30/10/2018)

கடைசி தொடர்பு:18:14 (30/10/2018)

`ஷேவிங்; ஊட்டிவிடுதல்; குளிப்பாட்டல்’ - தேர்தலுக்காக தெலங்கானா வேட்பாளர்கள் செய்யும் அட்டூழியம்!

தெலங்கானா தேர்தலை முன்னிட்டு, மக்களிடம் ஓட்டுக்கேட்க செல்லும்போது, அம்மாநில வேட்பாளர்கள் செய்யும் செயல்கள் மக்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளர்கள்

PC : @Iamtssudhir

தேர்தலுக்குத் தயாராகி வருகிறது தெலங்கானா. அம்மாநிலத்தின் எதிர்க்கட்சி தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடையாததால், பிரசாரம் இன்னும் தொடங்கவில்லை. ஆனால், ஆளும் ராஷ்ட்ரிய கட்சி சார்பில் பிரசாரத்தைத் தொடங்கி மக்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். கலைக்கப்பட்ட சட்டமன்ற சபாநாயகர் மதுசூதனா சாரி, பாஹூபல்பள்ளி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்த செயல் அங்குள்ள மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சாரி, திடீரென அப்பகுதியிலிருந்த சலூன் கடைக்குள் நுழைந்தார். உள்ளே சென்ற அவர், அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவருக்கு ஷேவிங் செய்து அசத்தினார்.

பிரச்சாரம்

PC : @Iamtssudhir

இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் மிரட்சி அடைந்தனர். அதோடு நிற்காமல், கத்தரிக்கோலை வாங்கி மற்றொரு வாடிக்கையாளரின் முடியை வெட்டி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், அங்கிருந்து வந்தவர், அருகிலிருந்த குடிசையில் உணவருந்திக்கொண்டிருந்த முதியவர் ஒருவருக்கு உணவு ஊட்டினார். இதன் உச்சகட்டமாக இரண்டு நாள்களுக்கு முன்பு, பாஹூபல்பள்ளி தொகுதியில் உள்ள ராம்நகர் காலனியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு, இறந்தவரின் உடலைத் தூக்கிச்சென்று மக்களிடையே தனது ஆதரவைத் தேடிக்கொண்டார்.

குளிப்பாட்டல்

PC : @Iamtssudhir

அதே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் கோரம் கனகய்யா, எல்லண்டு தொகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வெட்ட வெளியில் குளித்துக்கொண்டிருந்தார். இதைக்கண்ட கனகய்யா, ஒரு வாளி தண்ணீர் எடுத்து ஊற்றினார். இதைக்கண்ட கட்சிக்காரர்கள் அவருக்குப் பாராட்டை தெரிவித்தனர்.