வீட்டில் இருந்தபடியே முதல்வர் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார், மனோகர் பாரிக்கர்! | manohar parrikar started to look at the work as he was at home.

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:07:40 (31/10/2018)

வீட்டில் இருந்தபடியே முதல்வர் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார், மனோகர் பாரிக்கர்!

மனோகர் பாரிக்கர்

பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மனோகர் பாரிக்கர், கோவா மாநில முதல்வராக இருக்கிறார். உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுவந்தவர், பல மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இதனால், 'அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. புதிய அல்லது தற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டும்' என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. ஆனால், அதற்கு பா.ஜ.க மறுத்துவிட்டது. 

இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நீண்ட கால சிசிச்சையில் இருந்த மனோகர் பாரிகருக்கு கணையப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் இவர், நேற்று முதல் தனது வீட்டு அலுவலகத்தில் இருந்தவாறு முதல்வர் பொறுப்புகளைக் கவனிக்கத் தொடங்கினார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகே, மனோகர் பாரிக்கர் தலைமைச் செயலகம் சென்று வழக்கமான பணிகளைக் கவனிப்பார் எனத் தெரிகிறது. இருந்தபோதும், கோவா மாநில நிர்வாகம் வழக்கமான நிலைக்குத் திரும்பியுள்ளதாக ஆளும் கட்சியினர் கூறுகின்றனர்.