``இது தமிழா....?” - படேல் சிலையின் தமிழ் வாசகத்துக்கு எழுந்த கண்டனங்கள் | central government wrongly translated in tamil in statue of unity

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (31/10/2018)

கடைசி தொடர்பு:15:58 (31/10/2018)

``இது தமிழா....?” - படேல் சிலையின் தமிழ் வாசகத்துக்கு எழுந்த கண்டனங்கள்

சர்தார் படேல் சிலை

ந்தியாவின் முதல் துணைப்பிரதமரும், சுதந்திரத்துக்குப் பிறகு பல சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த பகுதிகளை ஒருங்கிணைக்க முக்கிய பங்காற்றியவருமான சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செய்யும் வகையில், அவருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு அருகில் உலகின் மிக உயரமான சிலையை அமைத்துள்ளது மத்திய அரசு. 33 மாதங்கள் நடந்த இவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அவருடைய  143வது பிறந்த நாளான இன்று சிலை திறப்பு விழாவை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்

இந்த நிகழ்வில்  இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழகத்தின் சார்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பங்கேற்கிறார். படேல் சிலைக்கு ‘statue of unity’  ‘எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  அதாவது `ஒற்றுமையின் சிலை’ இந்தச் சிலையானது 182 மீட்டர் உயரம் கொண்டது. அதுமட்டுமின்றி இந்தச் சிலை கட்டுமானமானது 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்க கூடியது.

தமிழ்

சர்தார் வல்லபாய் படேல் சிலையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில்  ‘statue of unity’ என்னும் பெயரை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வைத்துள்ளனர். அதில், தமிழில் ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ எனத் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்டவுடன் தமிழ் மொழிபெயர்ப்பை மட்டும் அழித்துள்ளனர். அதுவும் முறையாக அழிக்கப்படவில்லை. இது சிலையைக் கட்டிய மத்திய அரசின் பொறுப்பற்ற செயல் என சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.