வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (31/10/2018)

கடைசி தொடர்பு:08:40 (31/10/2018)

ராகுல் காந்தி மீது மானநஷ்ட வழக்கு - மத்தியப்பிரதேச முதல்வரின் மகன் அதிரடி

த்தியப்பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இது  2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான  ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. பல அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் தேர்தல் பணியில் வேகம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மத்தியப்பிரதேசத்தில் தங்கித் தொடர் பிரசாரங்களை மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில், அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பனாமா ஊழல், வியாபம் ஊழல் முதலிய குற்றச்சாட்டுகளை சுமத்தினார் ராகுல். அதற்கு மறுப்பு தெரிவித்த சிவராஜ்சிங் சவுகானுடைய மகன் கார்த்திகேயா சவுகான், ‘ராகுல்  மன்னிப்புக் கோராவிட்டால் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி

 

இதற்குப் பதிலளித்த ராகுல்,  ‘பி.ஜே.பி சார்ந்தவர்களில் ஊழல் செய்பவர்கள் அதிகமாக உள்ளதால் தவறுதலாக சொல்லிவிட்டேன், ஆனால் அவர்கள் மீது நான் சுமத்திய வியாபம் ஊழல் உண்மையானதுதான்’ என்றார். இதைத் தொடர்ந்து முதல்வரின் மகன், ராகுல் காந்தி மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார்.

நேற்று இந்தூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட பின் சாலையோரமுள்ள ஒரு சாதாரணமான கடையில் அமர்ந்து சாப்பிட்டார் ராகுல். அப்போது முக்கியமான நிர்வாகிகள் அவருடன் அமர்ந்திருந்தனர். அவரைப் பார்க்க கடையில் கூட்டம் சூழ்ந்த நிலையில், அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட இளைஞர்களுக்கு, அவர்களுடைய  போன்களை வாங்கி செல்பி எடுத்துக் கொடுத்தார்.