வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (31/10/2018)

கடைசி தொடர்பு:13:29 (31/10/2018)

சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிரமாண்ட சிலை உருவான கதை! #VikatanInfographicsட்

சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிரமாண்ட சிலை உருவான கதை! #VikatanInfographicsட்

ந்தியாவின் 'இரும்பு மனிதர்' என அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் பட்டேலின் 143-வது பிறந்த தினம் இன்று. 1918-ம் ஆண்டு விவசாயிகளுக்கான நிலவரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி மகாத்மா காந்தியின் கவனத்தைப் பெற்றவர் சர்தார் வல்லபபாய் பட்டேல். பின்னர், சுதந்திரப் போராட்டத்திலும் காந்தியுடன் இணைந்து போராடினார். அவரின் போராட்டக் குணத்துக்குக் கிடைத்த பரிசுதான் 'இரும்பு மனிதர்' என்ற பட்டம். 2010-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, வல்லபபாய் பட்டேலுக்கு, நர்மதை நதிக்கரையிலுள்ள சர்தார் சரோவர் அணை அருகே மிகப் பெரிய சிலை அமைக்கப்படும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த நிலையில், 3,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார்.

'Statue Of Unity' என அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் பட்டேலின் சிலைதான், உலகின் மிக உயரமான சிலை. கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையைவிட நான்கரை மடங்கு அதிக உயரம் கொண்டது இது. மேலும் இந்தச் சிலை பற்றிய சுவாரஸ்ய தகவல்களைக் கீழே காணலாம்...  

நீங்க எப்படி பீல் பண்றீங்க