வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (01/11/2018)

கடைசி தொடர்பு:13:40 (01/11/2018)

உலகில் அதிக பொருட்செலவில் உருவான சிலைகள் எவை?

லகிலேயே அதிக செலவு செய்து சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இரும்புமனிதரின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்துள்ளார். இந்தச் சிலை வடிவமைக்க 3,000 கோடி செலவாகியுள்ளது. உலகில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள மற்ற சிலைகள் எவை என்று பார்க்கலாம்.

புத்தர் சிலைகள்

சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலைக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது உயரமான சிலை சீனாவின் ஹனான் மாகாணத்தில் உள்ள புத்த சிலை ஆகும். 420 அடி உயரமுள்ள இந்தச் சிலையை கட்ட ரூ.407 கோடிதான் ஆனது. 

சீன மன்னர் சிலைகள்

சீன மன்னர்கள் யான், ஹூவாங் ஆகியோரின் சிலை மலைக்குன்றில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹனான் மாகாணத்தில் உள்ள இதைக் கட்ட ரூ.167 கோடி செலவு பிடித்தது. 1987-ம் ஆண்டு இந்தச் சிலை திறக்கப்பட்டது. 

சுதந்திர தேவி சிலை

நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைக்க ரூ.2 கோடி செலவானது. 93 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை பிரான்ஸ் நாட்டால் அமெரிக்காவுக்குப் பரிசளிக்கப்பட்டது. 

பிரமிக்க வைக்கும் புத்த சிலைகள்

மியான்மரில் 116 மீட்டர் உயரமுள்ள இன்னொரு புத்தர் சிலை 2008-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதை வடிவமைக்க ரூ.260 கோடி செலவானது 

சிலை

தாய்லாந்து நாட்டில் உள்ள மஞ்சள் வர்ண புத்தர் சிலை 92 மீட்டர் உயரம் கொண்டது. இதை வடிவமைக்க ரூ.7 கோடி ஆனது. உலகில் பெரும்பான்மையான மிகப் பெரிய சிலைகள் புத்தருக்கே வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது உலகின் அதிக உயரமுள்ள சிலையாக சர்தார் வல்லபபாய் பட்டேல் உருவாகியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க