வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (01/11/2018)

கடைசி தொடர்பு:19:40 (01/11/2018)

`அரசோடு இயங்கலாம் அல்லது பதவி விலகலாம்' - உர்ஜித் படேலை எச்சரிக்கும் ஆர்.எஸ்.எஸ்

உர்ஜித் படேல், மத்திய அரசுடன் இணக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லையென்றால், பதவி விலகலாம். தேசபக்தி பார்வை கொண்ட திறமையான ஆட்களை ரிசர்வ் வங்கி ஆணையத்தில் நியமிக்கப்பட வேண்டும். ” என்று பேசியுள்ளார் அஷ்வனி மஹாஜன்

'இந்தியன் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், மத்திய அரசுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்' என ஆர்.எஸ்.எஸ்ஸின் பொருளாதாரத் தலைமை எச்சரித்திருக்கிறது.

                                                 ரிசர்வ் வங்கி

ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பான ஸ்வதேஷ் ஜக்ரன் மஞ்ச்சின் துணை ஒருங்கிணைப்பாளரான அஷ்வனி மஹாஜன் அளித்திருக்கும் பேட்டியில், “ உர்ஜித் படேல், மத்திய அரசுடன் இணக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லையென்றால், பதவி விலகலாம். தேசபக்தி பார்வை கொண்ட திறமையான ஆட்களை ரிசர்வ் வங்கி ஆணையத்தில் நியமிக்கப்பட வேண்டும் ” என்று பேசியுள்ளார். மத்திய நிதி அமைச்சகத்துடன் எந்த முரண் ஏற்பட்டாலும், அது ரிசர்வ் வங்கிக் குழுவிடமே தெரிவிக்கப்படவேண்டும். அதைவிடுத்து, ரிசர்வ் வங்கி சுதந்திரமாக இயக்குவதென்பது மேற்கத்திய நடைமுறை. ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 7-வது பிரிவைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது என்றும் பேசியிருக்கிறார்.

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பனிப்போர் இறுகிவரும் இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் 7-வது பிரிவை மத்திய அரசு செயல்படுத்தலாம் என்ற சந்தேகம் அரசின் நிதித்துறைகளில் ஏற்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும், ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்ட நாளிலிருந்து இந்தச் சட்டத்தை அமல்படுத்தியதில்லை. இந்தச் சட்டப்பிரிவின்படி, ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தை மத்திய இயக்குநர்கள் குழுவிடம் மத்திய அரசு ஒப்படைக்கும். அதில், ரிசர்வ் வங்கி கவர்னரும் அங்கம் வகிப்பார். அதிகபட்சம் 4 துணை கவர்னர்களும் மத்திய அரசு நியமிக்கும் 4 இயக்குநர்களும் ஒரு அதிகாரியும் இடம்பெறுவார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க