`40 லட்சம் வாகனங்களின் பதிவெண்கள் ரத்து!' - நீதிமன்றத்தில் டெல்லி அரசு தகவல் | '40 lakhs vehicles can be canceled!' Delhi government information in court

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:08:34 (02/11/2018)

`40 லட்சம் வாகனங்களின் பதிவெண்கள் ரத்து!' - நீதிமன்றத்தில் டெல்லி அரசு தகவல்

டெல்லி

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்துவருகிறது. இதனால், அங்கு 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களை இயக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது. இதை மீறி பலரும் பழைமையான வாகனங்களை இயக்கிவருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பான ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, 'டெல்லியில் மாசு ஏற்படுவது தொடர்பாக மக்கள் புகார் அளிக்கப் பிரத்தியேக சமூக வலைதள பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை பல புகார்கள் வந்துள்ளன' என மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்தது. இதேபோன்று, 'நீதிமன்ற உத்தரவை மீறி இயக்கப்பட்டதால் 40 லட்சம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பதிவெண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என டெல்லி மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுபோன்ற கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் எனவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.