வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:09:00 (02/11/2018)

``பா.ஜ.க-வுக்கு இரண்டு இடங்கள் தான்” - உத்தவ் தாக்கரே காட்டம்

யோத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பிரச்னை சம்பந்தமாக பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்களும் பேசி வருகின்றன. சமீபத்தில் ‘பா.ஜ.க ஆட்சி முடிவதற்குள் ராமர் கோயிலை கட்டியே ஆக வேண்டும்' என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்திருந்தார். கோயில் கட்டுவது தொடர்பான இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது அதை வருகின்ற ஜனவரி மாதத்துக்குத் தள்ளி வைத்தனர். ‘ ஆட்சிக்காலம் முடிவதற்குள் ராமர் கோயிலைக் கட்டாவிட்டால் பா.ஜ.க-வுக்கு வரும் தேர்தலில் இரண்டு தொகுதிகள்தான் கிடைக்கும்’ என  சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரே

ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ``கோயில் கட்டுவதாகச் சொல்லி சேகரித்த செங்கற்கள் எல்லாம் அரசியலில் வெற்றி பெற தான். தேர்தல் பிரசாரத்தின்போது கோயில் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஆட்சி முடியப் போகும் நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால், 2019-ம் ஆண்டில் நடக்க இருக்கும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு இரண்டு இடங்கள்தான் கிடைக்கும். மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட நான் செல்கிறேன், ஆனால் பிரதமர் வெளிநாடு பயணங்களில்தான் ஆர்வமாக இருக்கிறார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.