ஹெலிகாப்டர் ஊழல்: தியாகி உள்பட 13 பேரின் வங்கிக்கணக்கு முடக்கம்

புதுடெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் தரகர்கள் மூலமாக 3600 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பாக, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

தியாகி உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரின் வங்கிக்கணக்குகளையும் சி.பி.ஐ முடக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!