``151 தாலுகாக்களில் வறட்சி” -அதிகாரபூர்வமாக அறிவித்த மகாராஷ்டிரா அரசு | Maharashtra govt declares drought in 151 tehsils

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (04/11/2018)

கடைசி தொடர்பு:07:00 (04/11/2018)

``151 தாலுகாக்களில் வறட்சி” -அதிகாரபூர்வமாக அறிவித்த மகாராஷ்டிரா அரசு

மகாராஷ்டிரா

இந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் 151 தாலுகாக்களில் அதிகாரபூர்வமாக வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 112 தாலுகாக்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. மீதமுள்ள 39 தாலுகாக்களில் மிதமான வறட்சி நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் மொத்தமாக்க 355 தாலுகாக்கள் உள்ளன. வறட்சி பாதித்த 151 தாலுகாக்கள் அனைத்தும் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் 26 மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்த 26 வறட்சி மாவட்டங்களில் எட்டு விதர்பா பகுதியிலும் எட்டு மரத்வாடா பகுதியிலும் ஐந்து வடக்கு மகாராஷ்டிராவிலும் நான்கு மேற்கு மகாராஷ்டிராவிலும் அமைந்துள்ளது.

60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பயிர்கள் சேதமடைந்திருக்கும் தாலுகா பகுதிகள் கடுமையான வறட்சி எனவும் 33.5 சதவீதத்திற்கும் மேற்பட்ட பயிர்கள் சேதமடைந்திருக்கும் தாலுகா பகுதிகள் மிதமான வறட்சியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயி தற்கொலை, பஞ்சம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக நிவாரண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது. மாநிலம் முழுவதுமே வறட்சியில்தான் உள்ளது அப்படியிருக்கும்போது 151 தாலூக்காக்களை மட்டும் வறட்சி பகுதியாக அறிவித்திருப்பது ஏன்? மாநிலம் முழுவதும் 20,000 கிராமங்கள் வறட்சியில் தவிக்கின்றன என எதிர்க்கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றன.  இந்த ஆண்டில் 77% மட்டுமே மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.