வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (04/11/2018)

கடைசி தொடர்பு:08:00 (04/11/2018)

“ராஜீவ் காந்திக்கு நடந்தது உங்களுக்கும் நடக்கலாம்”- பா.ஜ.க தலைவருக்கு கொலை மிரட்டல்

பரிமலைக்கு எல்லா வயதுடைய பெண்களுக்கும் அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, அதை அடுத்துப் பல பெண்கள் கோயிலுக்கு செல்ல முற்பட்ட போது பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதற்கான எதிர்ப்புகளைக்  கிளப்பினர். இதனை அடுத்து நான்கு பெண்கள் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு கோயிலுக்குச் செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு கொடுத்திருந்தனர்.

Photo: ANI

கேரளத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றப் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்றனர். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜகவினர் அங்குப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்கள் கோயிலுக்கு செல்லத் தடைவிதிக்க வேண்டும் எனக்  கேரள மாநில பா.ஜ.க. மற்றும் பாரத் தர்ம ஜனசேனாவும் சேர்ந்து நவம்பர் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரத யாத்திரை நடத்த இருக்கும் நிலையில், இந்த போராட்டத்திற்கு எதிராகக் கேரளா மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்குக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும்  மோகன் கே நாயர் என்ற நபர் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த கடிதத்தில் “ நான் மகாராஷ்டிராவில் வசிக்கும் மலையாளி, நீங்கள் நடத்தப் போகும் போராட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு. ராஜீவ் காந்தியை கொலை செய்ததற்கு இணையாக உங்களைக் கொல்ல திட்டம் வைத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.