‘மின்சாரம் இல்லை... சாலைகள் துண்டிப்பு..’- பனியில் உறையும் காஷ்மீர் | Heavy snowfall in Jammu and Kashmir has caused power breakdown in the valley

வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (04/11/2018)

கடைசி தொடர்பு:08:35 (04/11/2018)

‘மின்சாரம் இல்லை... சாலைகள் துண்டிப்பு..’- பனியில் உறையும் காஷ்மீர்

காஷ்மீரில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

காஷ்மீர்

Credits: ANI

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாநில முழுவதும் பல பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் வழங்க முயற்சி செய்தி வருகிறோம் இருந்தும் எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.  பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை விமான நிலைய அதிகாரிகள் ஜம்மு விமான நிலைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த வியாழக்கிழமைகளில் இருந்து கடுமையான பனிப்பொழிவு உள்ளது.


முகல் சாலையில் பனிப்பொழிவில் சிக்கிக்தவித்த வந்த 120 பேரை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். அதிகாலை 3 வரை மீட்புப்பணிகள் நடைபெற்றது. ஏராளமான சரக்கு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. நவம்பர் 5-ம் தேதிக்குப் பின்னர் நிலைமை சரியாகிவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.