வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (04/11/2018)

கடைசி தொடர்பு:14:15 (04/11/2018)

ஐ.சி.யுவிலுமா...? - இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

உடல்நலக் குறைவால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் கொடூரம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. 

பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேசம் மாநிலம் பாரெய்லி என்ற பகுதியில் உள்ள ஒரு இளம் பெண் இரண்டு தினங்களுக்கு முன்பு தங்கள் தோட்டத்தில் வேலை செய்துள்ளார். அப்போது அவரைப் பாம்பு கடித்துள்ளது. இதனால் அவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று ஐ.சி.யுவில் இருந்த அந்தப் பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். “ பாம்பு கடித்ததால் நான் மருத்துவமனையில் உள்ள ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். நேற்று இரவு, ஐ.சி.யுவில் என்னைத் தவிர மற்ற நோயாளிகள் யாரும் இல்லை. அப்போது திடீரென மருத்துவமனை ஊழியர்கள் நான்கு பேர் ஐ.சி.யுவில் நுழைந்தனர். பிறகு எனக்கு வலுக்கட்டாயமாக ஊசி போட்டு என்னை வன்கொடுமை செய்தனர்" எனச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பெண் பாதிக்கப்பட்டது தொடர்பாக அவரின் பாட்டி மருத்துவனை நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்துறையில் புகார் தெரிவித்ததன் பேரில் மருத்துவமனை ஊழியர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அந்தப் பெண் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுத் தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.