நடுவானில் பழுதான விமான இன்ஜின்: விமானியால் 47 பயணிகள் உயிர் தப்பினர்! | IndiGo plane makes emergency landing at Chennai airport

வெளியிடப்பட்ட நேரம்: 04:33 (06/11/2018)

கடைசி தொடர்பு:08:46 (07/11/2018)

நடுவானில் பழுதான விமான இன்ஜின்: விமானியால் 47 பயணிகள் உயிர் தப்பினர்!

ந்திராவிலிருந்து  சென்னை வந்த விமானத்தின் இன்ஜின் நடுவானில் திடீரென பழுதானது. அரை மணிநேர போராட்டத்துக்குப் பிறகு அவசரமாக விமானி தரையிறக்கியதால் 47 பயணிகள் உயிர் தப்பினர்.

இண்டிகோ விமானம்

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து இண்டிகோ விமானம், நேற்று முன்தினம் (ஞாயிறு) மாலை சென்னைக்குப் புறப்பட்டது. அதில் 47 பயணிகள் பயணம் செய்தனர். மாலை 6 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. ஆனால், நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போதே, விமானத்தில் இன்ஜின்களில் ஒன்று பழுதாகிவிட்டது. அப்போது ஒரே இன்ஜின் உதவியுடன் விமானத்தைத் தறை இறக்குவது கடினம் என்பதால், விமானி, தாமதிக்காமல் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து உஷார் படுத்தினார். இதையடுத்து, விமானத்தை வானில் வட்டமடிக்கும்படி உத்தரவிட்ட விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். விமான நிலைய ஓடுபாதையைச் சுற்றிலும் தீயணைப்பு வாகனம், மருத்துவக் குழுவினர் என அனைவரும் தயாராக நிறுத்தப்பட்டனர்.

விமானி -விமான இன்ஜின்

அதையடுத்து சுமார் அரை மணிநேரம் வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்த விமானம், 6.30 மணியளவில் பத்திரமாகத் தரையிறங்கியது. அதில் பயணம் செய்த 47 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முதற்கட்ட விசாரணையில் இன்ஜினில் போதுமான ஆயில் இல்லாததால், பழுதானதாகத் தெரியவந்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு  குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க