வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (06/11/2018)

கடைசி தொடர்பு:08:56 (07/11/2018)

உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சாடும் தமிழிசையின் ட்வீட் பஞ்ச்!

``வெடிவெடிக்க தடை... குடிகுடிக்கத்தடை இல்லை... எங்கே செல்கிறோம்" என்று உச்ச நீதிமன்றத்தையும், தமிழக அரசையும் கேலிசெய்யும் வகையில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்ட தமிழக அரசு மனுவை விசாரித்த நீதிமன்றம், கூடுதல் நேரம் ஒதுக்க மறுத்து, 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. அதோடு  பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது. 

தமிழிசை ட்விட்டர் கருத்து

அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியன்று தமிழக அரசால் மதுவிற்பனைக்கு கோடிக்கணக்கில் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வையும் ஒப்பிட்டு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில்  தமது கருத்தைப் பதிவிட்டுள்ளார். 

அந்த ட்விட்டில் "வெடி வெடிக்க தடை  ...........குடிகுடிக்கத்தடை இல்லை......வெடிக்கக் கால நிர்ணயம் ............குடிப்பதற்குக் காசு நிர்ணயம் ..... target in crores??? எங்கே செல்கிறோம்.??" என்று குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க