வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (07/11/2018)

கடைசி தொடர்பு:09:10 (07/11/2018)

‘எதிர்த்து நில்லுங்கள் படேல்’! - ஆர்.பி.ஐ கவர்னருக்கு யோசனையளிக்கும் ராகுல் காந்தி

பிரதமர் மோடிக்கு ஆர்.பி.ஐ-யிலிருந்து 3.6 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய நிதி அமைச்சகம் கேட்டுள்ளதாகவும், இதைத் தர மறுத்ததால் இருதரப்பு இடையிலான மோதல் ஏற்பட்டுள்ளது என்று ஆங்கில நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே ஆர்.பி.ஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. நாளுக்கு நாள் இவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னை பெரிதாகிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, `` பிரதமர் மோடி தான் செய்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்யவே ஆர்.பி.ஐயிடமிருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி கேட்கிறார். அவரை எதிர்த்து நில்லுங்கள் படேல் (உர்ஜித் படேல்) நாட்டைக் காப்பாற்றுங்கள்” என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.