மனைவி எம்.எல்.ஏ; கணவர் முதல்வர்!- இந்திய வரலாற்றில் இது முதன்முறை | karnataka CM Kumaraswamy, wife Anitha won byelection

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (07/11/2018)

கடைசி தொடர்பு:11:55 (07/11/2018)

மனைவி எம்.எல்.ஏ; கணவர் முதல்வர்!- இந்திய வரலாற்றில் இது முதன்முறை

ந்திய வரலாற்றில் முதன்முறையாக எம்.எல்.ஏ மனைவியுடன் சட்டசபைக்குள் நுழையும் முதல் முதல்வர் குமாரசாமி ஆவார்.

மனைவியுடன் குமாரசாமி

கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் ராமநகரா தொகுதியில் முதல்வரின் மனைவி அனிதா போட்டியிட்டார். நேற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரை 1.09 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அனிதா தோற்கடித்தார். இதனால் முதன்முறையாக முதலமைச்சர் ஒருவர், மனைவியுடன் சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அத்தகையப் பெருமையைக் குமாரசாமி பெறுகிறார். 

முன்னதாக குமாரசாமி ராம்நகரா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தபோது, அனிதா மதுகிரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். இருவரும் இணைந்து சட்டசபைக்கு வருவது வழக்கம். கடந்த மே மாதத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் குமாரசாமி சென்னபட்ணா, ராம்நகரா என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற குமாரசாமி ராம்நகரா தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து மனைவி அனிதாவை போட்டியிட வைத்தார். 

கர்நாடகத்தில் பெல்லாரி, மங்களுரு, ஷிவமோகா ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் ராம்நகரா, ஜம்கண்டி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. பெல்லாரி, மாண்டா, ராம்நகரா, ஜம்கண்டி தொகுதிகளில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அபார வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க