வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (24/04/2013)

கடைசி தொடர்பு:17:41 (24/04/2013)

ஊடுருவல்: சீனா எல்லை அருகே இந்திய வீரர்களை அதிக அளவில் நிறுத்த முடிவு

பெங்களூர்: சீன படையினர் மேலும் ஊடுருவாமல் தடுப்பதற்காக, அந் நாட்டையொட்டிய எல்லைப் பகுதியில் இந்திய வீரர்களை அதிக எண்ணிக்கையில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் ஊடுருவல் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வடக்கு லடாக் பகுதிக்குள் கடந்த ஏப்ரல் 15-ம் தேதியன்று, சீன ராணுவ வீரர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊடுருவினர். இந்திய எல்லைக்குள் இருக்கும் மலைப் பாங்கான ஒரு இடத்தில் வெட்டவெளியில் முகாம் அமைத்திருப்பதாகவும், அதில் சுமார் 20 வீரர்கள் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து எல்லையில் பதட்டம் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதனைத் தொடர்ந்து சீன ராணுவ உயரதிகாரிகளுடன் இந்திய ராணுவ உயரதிகாரிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின்போது, ஊடுருவிய பகுதியிலிருந்து வெளியேறுமாறு இந்தியா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.ஆனால் அதனை ஏற்க சீன அதிகாரிகள் மறுத்துவிட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்நிலையில் பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி,"சீன படையினர் எல்லை தாண்டி ஊடுருவிய பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண, அரசின் பல்வேறு தளங்களில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் காக்க தேவையான நடவடிக்கைகளை நமது அரசாங்கம் மேற்கொள்ளும்" என்றார்.

சீன எல்லையில் இந்திய வீரர்கள் குவிப்பு

இதனிடையே சீன படையினர் மேலும் ஊடுருவாமல் தடுப்பதற்காக அந்நாட்டையொட்டிய இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் இரண்டு படைப்பிரிவுகளை சேர்ந்த சுமார் 1,500 வீரர்களை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்