வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (08/11/2018)

கடைசி தொடர்பு:17:16 (08/11/2018)

அவ்னி புலி உடற்கூறு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்! - குட்டிகளையும் தேடும் வனத்துறை

கராஷ்ட்ராவில் அவ்னி புலி சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் ஒரு வாரக் காலத்துக்கும் மேலாக உணவு சாப்பிடவில்லை என்று உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த வனத்துறை அதிகாரிகள் அவ்னியின் இரு குட்டிகளையும் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குட்டிகள் பட்டினியால் இறந்து போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

அவ்னி புலி

யாவத்மால் வனப்பகுதியில அவ்னி 13 மனிதர்களைக் கொன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சுட்டுக் கொல்லப்பட உத்தரவிடப்பட்டது. துப்பாக்கிச் சுடும் நிபுணர் ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்ஷர் அலி என்பவர் அவ்னி புலியை சுட்டுக் கொன்றார். அவ்னியை உயிருடன் பிடிக்க முயற்சி எடுக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றம்சாட்டினார். அவ்னி புலியின் குட்டிகளும் நர மாமிசம் சாப்பிடப் பழகியிருந்ததால் அவற்றை உயிருடன் பிடிக்க உத்தரவிடப்பட்டது. அவ்னி சுட்டுக் கொல்லப்பட்டு 4 நாள்கள் ஆகிவிட்டது. இன்னும் அவ்னியின் 10 மாதக் குட்டிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 

நாக்பூரில் உள்ள தடவியல் அறிவியல் சோதனை ஆய்வு மையத்தில் அவ்னி புலியின் உடற்பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. உடற்கூறு ஆய்வறிக்கையில் அவ்னி புலி ஒரு வாரக் காலத்துக்கு மேலாக உணவு கிடைக்காமல் சாப்பிடாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க