2ஜி ஊழல்: பிரதமரின் மவுனம் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக உள்ளது - யஷ்வந்த் சின்ஹா

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங் மவுனம் காப்பது, குற்றத்தை அவர் ஒப்புக் கொள்வதாக அமைந்துள்ளது என்று பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக யஷ்வந்த் சின்ஹா இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராகி பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அவர் 2ஜி அலைக்கற்றை முறைகேட்டு புகார் குறித்து தொடர்ந்து மவுனம் காப்பதே, அவருக்கும் இதில் தொடர்பிருப்பதாக ஒப்புக் கொள்வதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு நேரில் வந்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க இது சரியான நேரம் இல்லையா? என்று அக்கடிதத்தில் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்பு எனக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், எதையும் நான் மறைக்கவில்லை என்று கூறியுள்ளீர்கள். எனவே, நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு பிரதமர் ஆஜராக வேண்டும். அதை விடுத்து, தொடர்ந்து மவுனம் காப்பது, முறைகேட்டில் உங்களுக்கும் தொடர்பிருப்பதை ஒப்புக் கொள்வதாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!