வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (09/11/2018)

கடைசி தொடர்பு:11:30 (09/11/2018)

ஏசி அறை... இலவச உணவு... இரவில் பெண்களைக் காக்கும் `என்டெ கூடு'- பினராயி விஜயன் அசத்தல்!

இரண்டு மாதங்களுக்கு முன், பெரும் மழை வெள்ளத்தில் முற்றிலுமாக சிதிலமடைந்த கேரளா, வெகுவிரைவிலேயே எழுந்து செயல்பட ஆரம்பித்தது. மாநில மக்கள் உத்வேகம் கொள்ளும் பொருட்டு, புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறார் கேரளா முதல்வர் பினராயி விஜயன். மீனவர்களுக்கு வீடு, குழந்தைகளின் கல்விக்கு சலுகைத் தொகை ஆகிய திட்டங்களை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, மாலை ஐந்து மணிக்கு மேல் பேருந்து நிலையம் வரும் பெண்களும் குழந்தைகளும், அரசு ஏற்படுத்தியிருக்கும் அறையிலேயே இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம் என்கிற புதிய திட்டத்தை 'என்டெ கூடு' என்கிற பெயரில் அவர் கொண்டுவந்திருக்கிறார்.

Pinarayi Vijayan

அத்திட்டம், மாலை ஐந்து மணியிலிருந்து மறுநாள் காலை ஏழுமணி வரை செயல்படும். ஒரே சமயத்தில் 50 பேர் தங்கக்கூடிய குளிரூட்டப்பட்ட அறை, இலவச உணவு, சுத்தமான சமையலறை, கழிப்பறை ஆகியவற்றுடன் 24 மணி நேரமும் செக்யூரிட்டி கண்காணிப்பு கொண்ட தங்குமிடமாக  அது இருக்கும். முதல் கட்டமாக, திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் 'என்டெ கூடு' என்கிற இத்திட்டத்தைக் கொண்டுவந்திருக்கும் கேரள அரசு, விரைவில் மற்ற மாவட்ட பெரு நகரங்களிலும் கொண்டுவர இருக்கிறது.