வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (09/11/2018)

கடைசி தொடர்பு:13:52 (09/11/2018)

தீபாவளி அன்று டெல்லியைப் பின்னுக்குத் தள்ளியது கொல்கத்தா!

கொல்கத்தா

சுற்றுச்சூழல் மாசு காரணமாக, தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தைக் குறைத்து உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று கூறியிருந்தது. இந்த நிலையில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருந்த காற்றின் தரம் குறித்தான தரவறிக்கையில், தீபாவளி கொண்டாட்ட சமயங்களில் கொல்கத்தா காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது.

காற்றின் தரம் 301ல் இருந்து 400-க்குள் இருந்தால், மிகவும் மோசமாக இருக்கிறது என்றாகும். தீபாவளி கொண்டாடப்பட்ட நவம்பர் 6-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கொல்கத்தா நகரத்தின் காற்றின் தர எண் 373 மற்றும் 354 என்று இருந்ததாகவும், அது மிகவும் மோசமான காற்றின் தரத்தைக் குறிக்கும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது. இது, தீபாவளி அன்று, மற்ற எந்த இந்திய மெட்ரோ நகரங்களிலும் இல்லாத அளவிற்கான மாசுக் கெடுதல் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.