பத்திரிகையாளர் ஸ்வாதி சதுர்வேதிக்கு ‘பத்திரிகைச் சுதந்திர’ விருது | i am a troll author swathi chathurvedi receives press freedom for courage award

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (09/11/2018)

கடைசி தொடர்பு:15:50 (09/11/2018)

பத்திரிகையாளர் ஸ்வாதி சதுர்வேதிக்கு ‘பத்திரிகைச் சுதந்திர’ விருது

‘I am a Troll: Inside the Secret World of the Bharatiya Janata Party’s Digital Army’ என்னும் புத்தகத்தின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான ஸ்வாதி சதுர்வேதிக்கு, துணிச்சலுக்கான இந்த ஆண்டின் ‘பத்திரிகை சுதந்திர விருது’ வழங்கப்பட்டிருக்கிறது. எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்களின் சர்வதேச அமைப்பு சார்பாக ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் இவ்விருதுகளில், இந்த ஆண்டு துணிச்சலுக்கான விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்வாதி.  

                                               ஸ்வாதி சதுர்வேதி

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிடுவதற்காக, கொலை மிரட்டல் விடுவது, பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்வோம் என அச்சுறுத்துவது போன்ற அநாகரிக மிரட்டல்களை தினம்தோறும் கடந்து செல்கிறோம். இதைப்போன்ற இணைய வம்புகளை, (டிராலிங்) தாக்குதல்களைக் குறிவைத்து செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் முழு நேர வேலையில் பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய ட்ரோலிங் பணியாளர்களை, அவர்களை இயக்கும் சக்திகளை அம்பலப்படுத்தியவர் டெல்லியைச் சேர்ந்த மூத்த புலனாய்வுப் பத்திரிகையாளர் ஸ்வாதி சதுர்வேதி.

பத்திரிகையாளர் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், “இப்புத்தகத்தை எழுதியதற்காகவும் பா.ஜ.க-வின் இயங்கிவரும் இந்த இணைய குழுக்களைக் குறித்த புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டதற்காகவும் மிக அதிகமான இணைய வழி அச்சுறுத்தல்களுக்கு ஆளானவர் ஸ்வாதி” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளரான க்ரிஸ்டோப் டெலோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அவரவர் நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு இடையில், பத்திரிகையாளர்களின் முக்கிய வேலைகளில் அவர்களுக்கான நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் நாங்கள் வழங்குகிறோம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க