மண்டல காலத்தில் சபரிமலை செல்ல 550 இளம் பெண்கள் முன்பதிவு! | 550 women register their names to go sabarimala

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (09/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (09/11/2018)

மண்டல காலத்தில் சபரிமலை செல்ல 550 இளம் பெண்கள் முன்பதிவு!

சபரிமலையில் வரும் 16-ம் தேதி தொடங்கும் மண்டல பூஜை காலத்தில் சந்நிதானத்துக்குச் செல்ல 550 இளம் பெண்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை

சபரிமலை செல்லும் பக்தர்கள் சந்நிதானத்தில் தரிசனம் செய்யும் நாள் மற்றும் நேரத்தை தேர்வுசெய்து ஆன்லைனில் புக் செய்யலாம். www.sabarimalaq.com என்ற இணையதள முகவரியில் இதற்கான முன்பதிவு செய்யலாம். கடந்த ஆண்டு மண்டல காலத்தில் ஆன்லைன் மூலம் 16 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இந்த மண்டல காலத்துக்கான முன்பதிவு கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இதுவரை பதிவான பெயர் பட்டியலை கேரள காவல்துறையின் தகவல்தொழில்நுட்ப பிரிவு டி.ஜி.பி லோக்நாத் பெகராவிடம் வழங்கியுள்ளது. அதில் 550-க்கும் அதிகமான இளம் பெண்கள் சபரிமலை சந்நிதானத்தில் வழிபாடு செய்ய முன்பதிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவு ஆன்லைன் புக்கிங் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கேரள காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.