`யாருடன் இருக்கிறேன் பார்த்தீர்களா?'- ராகுல் காந்தி பகிர்ந்த புகைப்படம்! | A Story Behind Ragul Gandhi's Instagram Post

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (12/11/2018)

கடைசி தொடர்பு:13:05 (12/11/2018)

`யாருடன் இருக்கிறேன் பார்த்தீர்களா?'- ராகுல் காந்தி பகிர்ந்த புகைப்படம்!

``சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் நான் யாருடன் இருக்கிறேன் பார்த்தீர்களா" என ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்த புகைப்படம் வைரலாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநில தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி. அவர் சத்தீஸ்கரை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி குறித்துப் பேசினார். கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் மோடிபோல் இருந்த நபருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ராகுல்

 

அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி. அதைப் பார்த்த பலரும் ஒரு நிமிடம் மோடி என நினைத்து ஒருகணம் திகைத்தனர். பார்ப்பதற்கு மோடி போன்று இருந்த அந்த நபரின் பெயர் அபிநந்தன் பதக். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார் அந்த நபர். மோடியைப் போன்றே 'மோடி கோட்', கறுப்புக் கண்ணாடி, மப்ளர் அணிந்து காணப்படும் அபிநந்தன் பதக் பயங்கர பேமஸ் ஆன ஆள். இன்ஸ்டாகிராமில் இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 2,800 கமென்ட்கள் இட்டனர்.