வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (13/11/2018)

கடைசி தொடர்பு:13:15 (13/11/2018)

மல்யுத்த வீராங்கனையிடம் சவால் விட்ட ராக்கி சாவந்துக்கு நடந்த சோகம்!

ண்டிகர் நகரில் பெண்கள் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. போட்டியைக் காண சர்ச்சைக்குரிய நடிகை ராக்கி சாவந்தும் சென்றிருந்தார். மேடையின் முன் பகுதியில் அமர்ந்து அவர் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். மல்யுத்தப் போட்டியில் தன்னுடன் போட்டியிட்ட அத்தனை பேரையும் ரொபல் என்ற வீராங்கனை தோற்கடித்தார். வெற்றி பெற்ற ரொபல் பார்வையாளர்களைப் பார்த்து 'என்னை வீழ்த்த உங்களில் யாருக்காவது திராணி இருக்கிறதா' என்று கேட்டார். ராக்கி சாவந்துக்குத்தான் வாய் சும்மா இருக்காதே....' உங்களுடன் மோத நான் இருக்கிறேன். ஆனால், என்னைப் போல் நடனமாட வேண்டும்' என்று எதிர் சவால் விட்டார்.

ராக்கி சாவந்த்

பின்னர் மேடை ஏறிய அவர் ரொபெல் உடன் மோதினார். தொழில்முறை மல்யுத்த வீராங்கனையான ரொபெல், ராக்கி சாவந்த்தைப் புரட்டி எடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் ராக்கி சாவந்தை தலைக்கு மேலே தூக்கி பம்பரம் போல சுற்றிய ரொபெல் அப்படியே தரையில் தலைகுப்புற அடித்தார். கதறிவிட்டார் பிரபல இந்தி நடிகை. முதுகுப்பகுதியில் பலத்த அடி ஏற்பட்டதால் வலியால் துடித்தார். பதறிப் போன போட்டி அமைப்பாளர்கள் அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். 

அவருக்கு இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெற்றி பெற்ற ரொபெல் மேடையில் ஒரு குட்டி நடனத்தைப் போட்டு விட்டுதான் வெளியேறினார். 

தமிழில் கம்பீரம் உள்ளிட்ட சில படங்களில் ராக்கி சாவந்த் நடித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க