வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (13/11/2018)

கடைசி தொடர்பு:14:15 (13/11/2018)

சிறுநீர் கழிக்க ரயிலை நடுவழியில் நிறுத்திய டிரைவர்! கடைக்காரர் எடுத்த வீடியோவால் சிக்கினார்

சிறுநீர் கழிப்பதற்காக எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் டிரைவர் நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்

குஜராத்தில் இருந்து மும்பை செல்லும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தது. காலை 10.30 மணியளவில் வாசாய் என்ற இடத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ரயில் நிறுத்தப்பட்டது. சிக்னல் ஏதும் போடாமல் ரயில் நிறுத்தப்பட்டதைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற கடைக்காரர் தொஷானி என்பவர் நடந்த சம்பவத்தை வீடியோ எடுக்கத் தொடங்கினார். அப்போது ரயிலில் இருந்து வேக வேகமாக இறங்கிய அந்த ரயில் டிரைவர் சிறிது தூரம் சென்று சிறுநீர் கழித்துள்ளார். 

சிறுநீர் கழித்த பிறகே ரயிலை இயக்கியுள்ளார் அந்த டிரைவர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டார் அந்தக் கடைக்காரர். வீடியோ வைரலாகப் பரவ, சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது ரயில்வே. இதுதொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரி கஜானன் மகாபூர்கர், ``சிறுநீர் கழிப்பதற்காக டிரைவர் ரயிலை நிறுத்தியிருந்தால் அது தவறு. வழக்கமாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் பாத்ரூம் வசதி செய்யப்பட்டிருக்கும். ஆனாலும், ரயிலை டிரைவர் ஏன் நடுவழியில் நிறுத்தினார் என்பது தெரியவில்லை. தெளிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க