ஃப்ளிப்கார்ட் சி.இ.ஓ பின்னிபன்சால் ராஜினாமா! | Flipkart CEO Binny Bansal resigns

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (14/11/2018)

கடைசி தொடர்பு:07:25 (14/11/2018)

ஃப்ளிப்கார்ட் சி.இ.ஓ பின்னிபன்சால் ராஜினாமா!

ஃப்ளிப்கார்ட்டின் தலைமைச் செயல் அதிகாரி பின்னிபன்சால் திடீரென ராஜினாமா செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பின்னி பன்சால்

அமெசான், ஃப்ளிப்கார்ட் இரண்டும் ஆன்லைன் ஷாப்பிங்களில் முன்னணி நிறுவனங்களாக வலம்வந்துகொண்டிருக்கின்றன. இவ்விரண்டு நிறுவனங்களுமே அவ்வப்போது ஆஃபர்களை வழங்கி, வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்த்துவருகின்றது. இப்படியிருக்கும் ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு வால்மார்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதையடுத்து வால்மார்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது ஃபிளிப்கார்ட். இதை ஃப்ளிப்கார்ட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த (CEO) பின்னிபன்சாலே விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததாக ஃபிளிப்கார்ட்-வால்மார்ட் நிறுவனம் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுக்கான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து பின்னிபன்சால் ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடித்தத்தை அந்நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு இக்கட்டான காலகட்டத்தில் நிலவிய சிக்கல்களைத் தீர்த்து வழிநடத்திச் சென்றவர் பின்னிபன்சால். அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.