வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (15/11/2018)

கடைசி தொடர்பு:11:55 (15/11/2018)

`நிச்சயமாயிட்டு; என்னை மறந்துவிடு!'‍ - கேரளாவில் மகளின் காதலை எதிர்த்த தாயைக் கொன்ற மதுரை காதலன்

கேரளாவில் மகளின் ஃபேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலையில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட மேரிக்குட்டி

pic manorama

கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.கே.வர்கீஸ். இவர் வளைகுடா நாட்டில் பணிபுரிகிறார். இவரின்  மனைவி மேரிக்குட்டி. இந்தத் தம்பதியின் மகள் லிஸாவுக்கும் மதுரையைச் சேர்ந்த சதீசுக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு மலர்ந்து காதலாக மாறியுள்ளது. மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சதீஷ், செவிலியராக பணி புரிந்து வந்தார். இதற்கிடையே லிஸாவுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருப்பதால் தன்னை மறந்து விடும்படி லிஸா சதீஷிடம் கூறியதோடு அவரிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். 

இந்த நிலையில், மதுரைக்கு வந்த சதீஷ் நேற்று அங்கிருந்து காரில் குளத்துப்புழா சென்றுள்ளார். லிஸா வீட்டில் இல்லாத நிலையில், தாய் மேரிக்குட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். அவரிடத்தில் சதீஷ் தன் விருப்பத்தைக் கூறியுள்ளார். மேரிக்குட்டி தன் மகளைத் திருமணம் செய்து தரமுடியாது என்று மறுத்ததால் ஆத்திரமடைந்த சதீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேரிகுட்டியை சரமாரியாகக் குத்தினார். மேரிக்குட்டி அலறியபடி சாலைக்கு ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், சிகிச்சை பலனளிக்காமல் மேரிக்குட்டி இறந்து போனார். 

கொலை செய்த சதீஷைப் பிடித்து பொதுமக்கள் பின்னர் அவரைப் போலீஸில் ஒப்படைத்தனர். மதுரையிலிருந்து கார் ஓட்டிச் சென்ற சித்திரைச்செல்வம் என்பவரும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க