வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (15/11/2018)

கடைசி தொடர்பு:12:55 (15/11/2018)

மகாராஷ்ட்ராவில் மற்றொரு சோகம்! - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு

காராஷ்ட்ராவில் மேன் ஈட்டராக மாறிய அவ்னி புலி அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டது. அவ்னி கொல்லப்பட்ட விஷயத்தில் சர்ச்சை வெடித்த நிலையில், நேற்று ரயில் மோதி இரு புலிக்குட்டிகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளன.

புலிக்குட்டிகள் பலி

சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜுனானோ வனப்பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள வனச்சரணாலயத்தில் 40 புலிகள் வசிக்கின்றன. இந்தக் குட்டிகள் பிறந்து 10 மாதங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சந்திராப்பூர் - கோண்டியா இடையே ஓடும் ரயிலில் சிக்கி  இரண்டும் உயிரிழந்துள்ளன. சந்திராப்பூர் மாவட்ட தலைமை வனப் பாதுகாவலர் ராமராவ் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார். குட்டிகளின் தாய் குறித்து தகவல் தெரியவில்லை. 

அதேவேளையில் அவ்னி புலியின் குட்டிகள் பற்றி நல்ல தகவல் கிடைத்துள்ளது. சில நாள்களுக்கு முன் பந்தர்கவாடா வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட அவ்னிக்கு இரு 10 மாதக்குட்டிகள் இருந்தன. தாய் கொல்லப்பட்டதும் குட்டிகளின் நிலை குறித்து தெரியவில்லை. வனத்துறையினர் அவற்றை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அவ்னியின் இரு குட்டிகளையும் விகிர்கான் என்ற கிராமத்தில் வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இரு குட்டிகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளதாகவும் சேர்ந்தே அவை இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இரு குட்டிகளையும் உயிரோடு பிடிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க