வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (15/11/2018)

கடைசி தொடர்பு:14:40 (15/11/2018)

ரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா!- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு

முகேஷ் அம்பானியின் மகள் இஷா ஆனந்த், பிரமாலை டிசம்பர் 12-ம் தேதி மணக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் திருமணத்துக்கு முந்தையச் சடங்குகள் இரு நாள்கள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்துக்குப் பிறகு மும்பை ஒர்லி கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற கிலிட்டா பங்களாவில் புதுமணத் தம்பதி குடிபுகின்றனர்.

அம்பானி மகள் இஷா குடிபுகும்  பங்களா

கிலிட்டா கட்டடம் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்தது. கடந்த 2012-ம் ஆண்டு இந்தக் கட்டடத்தை ரூ.450 கோடி கொடுத்து ஆனந்த் பிரமாலின் தந்தை அஜே பிரமால் வாங்கினார். தற்போது, இது ஐந்து அடுக்கு பங்களாவாக மாற்றப்பட்டுள்ளது. அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ள இந்தப் பங்களா 50,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. பிரமிக்க வைக்கும் உள் அலங்கார வேலைப்பாடுகளுடன் பங்களா புதுமணத் தம்பதிக்காகத் தயராகி வருகிறது. பங்களாவின் உள்ளேயே பணியாளர்களுக்கு குடியிருப்புகள் அமைந்துள்ளன. டிசம்பர் 1-ம் தேதி புதுமனை குடிபுகும் விழா நடைபெறுகிறது. இந்தப் பங்களாவை மகன் ஆனந்த் மற்றும் மருமகள் இஷாவுக்கு திருமணப்பரிசாக அஜே பிரமால் வழங்கியுள்ளார்.

மும்பையில் அம்பானி குடும்பம் வசித்து வரும் ஆன்டிலியா கட்டடம்தான் உலகிலேயே இரண்டாவது மதிப்புமிக்க வீடு. முதல் இடத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை உள்ளது. 27 மாடிகள் கொண்ட ஆன்டிலியாவின் மதிப்பு ரூ.14,000 கோடி ஆகும். இங்கு முகேஷ், நிடா தம்பதியுடன் மகள் இஷா ஆனந்த், மகன் ஆகாஷ் ஆகியோர் வசித்து வந்தனர். இந்தப் பங்களாவில் 600 பணியாளர்களும் உள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க