உணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்! | Swiggy to hire 2000 women delivery personnel

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (15/11/2018)

கடைசி தொடர்பு:20:20 (15/11/2018)

உணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்!

உணவை நாம் தேடிச்சென்ற காலம் போய்விட்டது. இப்போது, உணவுதான் நம்மைத் தேடிவருகிறது. சாப்பிடும் பொருள்களை வீடுதேடி வந்து டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஸ்விக்கி முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில், மொத்தம் 45 நகரங்களில் 45,000 உணவகங்களுடன் இணைந்து செயல்படும் ஸ்விக்கியில், தற்போது டெலிவரி செய்யும் வேலையில் மட்டும் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.

ஸ்விக்கி

ஆனால், இதில் 60 பேர் மட்டுமே பெண்கள். கொச்சி, புனே, அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, நாக்பூர் என மொத்தம் 10 நகரங்களில் மட்டுமே பெண்கள் இந்த வேலையில் உள்ளார்களாம். உணவுத் துறையில் பெண்களுக்கான வேலையை அதிகரிக்க, 2000 பெண்களை டெலிவரி சார்ந்த வேலைகளுக்குப் பயிற்சிகொடுத்துப் பணியமர்த்தப்போவதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Safe zone என்று சில ஏரியாவை மட்டும் தேர்வுசெய்து, அங்குமட்டுமே பெண்களுக்கு வேலை அளிக்க உள்ளதாகக் கூறியுள்ளார்கள். டெலிவரி செய்பவர்களுக்கு இரவு 6 மணி வரை மட்டுமே வேலை கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள். லாஜிஸ்டிக் மற்றும் ஆபரேஷன்ஸ் துறைகளிலும் தலைவர் மற்றும் மேலாளர் பொறுப்புகளில் பெண்களைப் பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.