ஆந்திராவில் சி.பி.ஐ-க்குத் தடை! - ரகசியமாகப் பிறப்பித்த உத்தரவு என்ன? #CBI | CBI barred in Andhra Pradesh to probe inside the state...

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (17/11/2018)

கடைசி தொடர்பு:08:45 (17/11/2018)

ஆந்திராவில் சி.பி.ஐ-க்குத் தடை! - ரகசியமாகப் பிறப்பித்த உத்தரவு என்ன? #CBI

இந்தத் தகவல் நேற்றிரவு அதிகாரபூர்வமாக வெளியானது. டெல்லி சிறப்புக் காவல்துறை சட்டப்பிரிவு 6-ன் படி மாநில அரசு சி.பி.ஐ-க்கு வழங்கிய அனுமதியைத் திரும்பப் பெறலாம்.

ஆந்திர மாநிலத்தில் விசாரணைகளையும் சோதனைகளையும் நடத்த சி.பி.ஐ-க்குத் தரப்பட்ட அனுமதியை ரத்து செய்துள்ளது அம்மாநில அரசு. டெல்லி சிறப்புக் காவல்துறையின்கீழ் செயல்பட்டு வருவது சி.பி.ஐ. சிறப்புக் காவல்படை சட்டத்தின்படி அதற்கு டெல்லியில் மட்டுமே அதிகாரம் உள்ளது. மற்ற மாநிலங்களில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனில் அம்மாநில அரசாங்கத்திடம் அனுமதி பெறவேண்டும். அந்தவகையில் ஆந்திர மாநிலத்தின் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மற்றும் சோதனைகளை நடத்த இதற்குமுன் தரப்பட்ட அனுமதியை ஆந்திர அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. இதுதொடர்பான ரகசிய உத்தரவை அம்மாநிலத்தின் உள்துறை கொள்கைச் செயலாளர் ஏ.ஆர். அனுராதா நவம்பர் 8-ம் தேதி பிறப்பித்துள்ளார்.

சி பி ஐ

இந்தத் தகவல் நேற்றிரவு அதிகாரபூர்வமாக வெளியானது. டெல்லி சிறப்புக் காவல்துறை சட்டப்பிரிவு 6-ன் படி மாநில அரசு சி.பி.ஐ-க்கு வழங்கிய அனுமதியைத் திரும்பப் பெறலாம். சி.பி.ஐ-க்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வழங்கிய அந்த அனுமதியை இச்சட்டப்பிரிவின் கீழ் தற்போது திரும்பப் பெற்றுள்ளது ஆந்திர அரசாங்கம். அதேசமயம், மாநில விசாரணைப் பிரிவின் அதிகார வரம்பை விஸ்தரிக்க அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஆந்திர துணை முதல்வர் சின்ன ராஜப்பா, ``எங்களுக்கு சி.பி.ஐ மீது நம்பிக்கை உள்ளது. ஆனால், அதன் தலைமை அதிகாரிகளுக்கு எதிரான சமீபத்திய குற்றச்சாட்டுகள் எங்களை இம்மாதிரி முடிவெடுக்கும் கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது. அவர்கள் இனி ஒவ்வொரு வழக்குக்கும் அனுமதி பெறவேண்டும்" என்றார். அதோடு கர்நாடக அரசும் அனுமதியைத் திரும்பப் பெற்றுள்ளதாகவும், மாநிலத்திலுள்ள மத்திய அரசு அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ-க்கு எந்தவித தடையுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.