டெல்லியில் தொடரும் துயரம்: கழிவறையில் சிறுமி பலாத்காரம்!

புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரம் தொடர் நிகழ்வுகளாகிவிட்ட நிலையில், மற்றுமொரு நிகழ்வாக 6 வயது சிறுமி கழிவறையில் பலாத்காரம் செய்யபட்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தெற்கு டெல்லியில் உள்ள பதர்பூரில் உள்ள பொது கழிவறையில் நேற்று மாலை,அப்பகுதியை சேர்ந்த குடிசைப்பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமி கறுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அந்த சிறுமியை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் அபாய கட்டத்தை தாண்டுவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மூச்சுக்குழாயில் எந்த பாதிப்பும் இல்லாததால் அச்சிறுமி உயிர் பிழைத்திருப்பதாக தெரிவித்த அவர்கள்,  உடல் முழுவதும் உள் மற்றும் வெளிக்காயங்கள் உள்ளதாகவும், மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே முழு விவரமும் தெரியவரும் என்றும் கூறினர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!