வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (27/04/2013)

கடைசி தொடர்பு:18:04 (27/04/2013)

கர்நாடக மக்களுக்கு பா.ஜனதா அரசு துரோகம் இழைக்கிறது: சோனியா கடும் தாக்கு!

பெங்களூரு: கர்நாடக மக்களுக்கு பா.ஜனதா அரசு துரோகம் இழைத்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, இன்று சிக்மக்லூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது,"கர்நாடக மக்களுக்கு பா.ஜனதா அரசு துரோகம் இழைத்து வருகிறது. மக்களின் நலனை முற்றிலும் புறக்கணித்து விட்டது.

கர்நாடக சுரங்க முறைகேடு, சுற்றுச் சூழலையே கெடுத்துவிட்டது. எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். தங்களது இருண்ட நாட்களை மாற்ற விரும்புகின்றனர் மக்கள். அவர்கள் இப்போதே அந்த மாற்றத்தை விரும்புகின்றனர்" என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்