1,398 விவசாயிகளின் ரூ.4 கோடி கடனை அடைத்தார் அமிதாப்! | Amitabh Bachchan to Pay off Loans of UP Farmers

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (20/11/2018)

கடைசி தொடர்பு:12:50 (20/11/2018)

1,398 விவசாயிகளின் ரூ.4 கோடி கடனை அடைத்தார் அமிதாப்!

டிகர் அமிதாப்பச்சன் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர். பாலிவுட்டில் சூப்பர் ஹீரோவாகி டெல்லியில் செட்டில் ஆகி விட்டாலும் தாய் மண் மீது அமிதாப்புக்குப் பற்று அதிகம். உத்தர பிரதேசத்திலும் கடனில் சிக்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகள் அதிகம். எனவே கடனில் சிக்கியுள்ள விவசாயிகளின் கடனை அடைக்க அவர் முடிவு செய்தார். அந்த வகையில் 1,398 விவசாயிகளின் கடன் தொகை 4.05 கோடியை  அடைத்தார். கடனை அடைத்ததோடு அமிதாப் நிறுத்திக் கொள்ளவில்லை. தான் கடனை அடைத்த விவசாயிகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 70 பேரை மும்பைக்கு அழைத்து விருந்தளித்து வங்கிக் கடனை அடைத்தற்கான கடிதங்களை அவர்களிடம் ஒப்படைக்க அவர் முடிவு செய்துள்ளார்.

அமிதாப்பச்சன்

இதற்காக லக்னோவிலிருந்து மும்பை வரும் ரயிலில் ஒரு பெட்டி முழுவதும் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 26- ந் தேதி மும்பை வரும் விவசாயிகளிடத்தில் வங்கிக் கடிதங்களை அவர்களிடத்தில் வழங்குகிறார். அமிதாப்பின் செய்தி தொடர்பாளர், `இந்தத் தகவலை உறுதி செய்துள்ளதோடு இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம் ' என்று தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த 350 விவசாயிகளின் கடன்களை அமிதாப் அடைத்தார். அதுபோல் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த 44 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அமிதாப் நிதியுதவி வழங்கினார். `பா' ஸ்டாரின் சொந்த ஊர் உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் ஆகும். மும்பையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீது சிவசேனா கட்சியினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவார்கள். பாலிவுட்டின் உச்ச நட்சத்திரத்தையும் சிவசேனா கட்சியினர் அவ்வப்போது குறை கூறுவது உண்டு. 

நடிகர் நானா படேகரும் மகாராஷ்ட்ராவில் கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடன்களை அடைத்து வருகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க