வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (20/11/2018)

கடைசி தொடர்பு:13:20 (20/11/2018)

இந்தியாவிலேயே யானைகளுக்காக அதிநவீன மருத்துவமனை! - அசத்திய அரசு சாரா அமைப்பு

இந்தியாவிலேயே முதல்முறையாக யானைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

யானைகள் மருத்துவமனை

Photo Crdits : wildlifesos

ஆசியாவிலேயே, இந்தியாவில்தான் 50 முதல் 60 சதவிகிதம் யானைகள் வாழ்கின்றன. இதனால், யானை இனங்களைப் பாதுகாக்க இங்குள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவில் வாழும் யானைகள், தங்களின் வாழ்வாதாரத்துக்காக அதிகமான பிரச்னைகளைச் சந்திக்கின்றன. அவை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், யானைகளுக்கு முறையான மருத்துவ வசதி இல்லை.

இவற்றைச் சரி செய்வதற்காக, சில அரசு சாரா அமைப்புகள் உத்தரப்பிரதேச வனத்துறையுடன் இணைந்து, இந்தியாவிலேயே முதல்முறையாக மதுராவில் , ஒரு பிரமாண்ட யானைகள் மருத்துவமனையைத் தொடங்கியுள்ளனர். இங்கு, உடல்நலம் பாதித்த யானைகளுக்கு ஸ்கேன்,  எக்ஸ்ரே, லேசர் சிகிச்சை, பல் எக்ஸ்ரே, அல்ட்ராசோனோகிராஃபி போன்ற அதிநவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை  உருவாக்கப்பட்டுள்ளது. இதை, கடந்த 16-ம் தேதி ஆக்ரா கலெக்டர் அனில் குமார் திறந்துவைத்தார். 

இந்த மருத்துவமனை 12,000 சதுர அடி பரப்பளவில் சிசிடிவி கேமரா வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு, 24 மணிநேரமும் யானைகளைக் கண்காணிக்க மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாது, யானைகளைப் பராமரிப்பதற்கு, உணவு வழங்குவதற்கு என தனித்தனியாக ஆட்கள் உள்ளனர். மிகவும் உடல்நலம் பாதித்த யானைகள், அங்கேயே தங்கி சிகிச்சை பெறும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இது, இந்தியாவில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.