வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (20/11/2018)

கடைசி தொடர்பு:13:11 (20/11/2018)

``நீ எப்போதுமே ஸ்பெஷல்!” உருகிய பிரியங்கா... களைகட்டும் கல்யாணம்!

கடந்த ஆகஸ்ட் மாதம், ப்ரியங்கா சோப்ராவுக்கு காதலர் நிக் ஜோனஸூடன் நிச்சயார்த்தம் நடந்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் வரும் டிசம்பர் 2-ம் தேதி, திருமணம் செய்யவுள்ளனர்.

``நீ எப்போதுமே ஸ்பெஷல்!” உருகிய பிரியங்கா... களைகட்டும் கல்யாணம்!

பாலிவுட்டில் இந்த வருடம் முழுக்கவே கல்யாண சீசன்தான்! நடிகைகள் நேஹா துபியா, சோனம் கபூர், தீபிகா படுகோன் ஆகியோர் திருமணப் பந்தத்துக்குள் நுழைந்துவிட்டார்கள். இப்போது, பாலிவுட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பது, நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணம் குறித்துதான்!

திருமணம்

கடந்த ஆகஸ்ட் மாதம், பிரியங்கா சோப்ராவுக்கு காதலர் நிக் ஜோனஸூடன் நிச்சயார்த்தம் நடந்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் வரும் டிசம்பர் 2-ம் தேதி, ஜோத்பூரிலுள்ள `உமைத் மாளிகை'யில் இந்து முறைப்படி திருமணம் செய்யவுள்ளனர். நவம்பர் 30-ம் தேதியிலிருந்து மெஹந்தி, சங்கீத நிகழ்ச்சிகள் என மூன்று நாள் திருமணமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இது முடிந்ததும், கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களின் திருமணம் இந்தியாவிலேயே நடக்கவுள்ளது.

``பிரியங்காவும் நிக்கும் சமீபத்தில் இந்தியா வந்திருந்தனர். அவர்கள் இருவரும் ஜோத்பூருக்குச் சென்றிருந்தபோதுதான், `உமைத் பவனில்’ திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தனர். மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நட்பு வட்டங்களைத்தான் திருமணத்துக்கு அழைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 200 மட்டுமே! இருவருக்குமே ஹாலிவுட்டில் நண்பர்கள் ஏராளம். அவர்கள் இருப்பது நியூ யார்க்கில் என்பதால், அங்கு மணமக்கள் அழைப்பு, ஜோத்பூரில் திருமணம் என முடிவெடுத்தனர்!”, என்று கூறுகிறது பிரியங்காவின் நெருங்கிய வட்டம்!

ப்ரியங்கா

ஜோத்பூர் ‘உமைத் பவன்’ ஒருநாள் தங்கும் செலவு, 60,000 டாலர்களாம்! அதாவது 43 லட்சமாம்! தாஜ் ஹோட்டல் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த மாளிகையில், 347 பிரமாண்ட அறைகள், மிகப்பெரிய ஹோட்டல், 20ம் நூற்றாண்டில் ஜோத்பூரின் ராயல் குடும்பங்களைப் பற்றிய அருங்காட்சியகம் உள்ளிட்டவை இருக்கின்றன. 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மாளிகையில், 15 ஏக்கர் தோட்டமும் உள்ளது. இந்தத் தோட்டத்திலேயே, ராஜ சிம்மானசம், சாப்பிடும் இடம், நூலகம், ஸ்பா, நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட்,  ஸ்குவாஷ் விளையாடும் இடம்... எனத் தனித்தனியே பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், தங்களின் திருமணத்தை கலிஃபோர்னியாவில் பிரேவிலி ஹீல்ஸ் பகுதியில், பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

ப்ரியங்கா

இயக்குநர் ஷோனாலி போஸ் இயக்கத்தில், நடிகர் ஃப்ரான் அக்தருக்கு ஜோடியாக, `தி ஸ்கை இஸ் பிங்க்’ என்ற படத்தில் நடித்துவருகிறார் பிரியங்கா. அதே சமயம், தன் திருமணக் கொண்டாட்டங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும், நிக் ஜோன்ஸின் ஒவ்வொரு பதிவுக்கும் ‘ஹார்டின்’ ஏமோஜியைத் தட்டவும் தவறுவதில்லை. 

சமீபத்தில், நிக் ஜோனஸ், தன் இன்ஸ்டா பக்கத்தில், ``13 வருடங்களுக்கு முன், நான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, உடல் மிகவும் மெலிந்தேன். ஆனால், இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமாக இருக்கிறேன். என் உடல் ஆரோக்கியம்தான் எனக்கு மிகவும் முக்கியம். எனக்கு எப்போதும் பக்கபலமாக இருந்த என் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் நன்றி” என்று பதிவிட்டிருக்க, அதற்கு பிரியங்கா சோப்ரா, ``சர்க்கரை நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீ எப்போதுமே ரொம்ப ஸ்பெஷல்!” என்று கூறி உருகியிருந்தார்.

நிக் ஜோனஸ்

சமீபத்தில், இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட ரன்வீர் கபூரும் தீபிகா படுகோனும், வரும் 21-ம் தேதி பெங்களூருவிலும், 28-ம் தேதி மும்பையிலும் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மேலும், தங்களின் திரைத்துறை வட்டத்துக்காகவே பிரத்யேகமாக டிசம்பர் 1-ம் தேதி வரவேற்பு நிகழ்வு ஒன்றையும் நடத்தவுள்ளனர். இதனால், பாலிவுட் வட்டத்தில் யார் யார் எந்தத் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வது என்பதில் சற்றே குழம்பியிருப்பதாகச் சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஒருபக்கம் வந்துகொண்டிருக்கின்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்