வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (22/11/2018)

கடைசி தொடர்பு:16:20 (22/11/2018)

மூன்று வயதில் ரூ.18 கோடிக்கு அதிபதியான முதலமைச்சரின் பேரன்!

ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் நரா தேவனேஷின் சொத்து மதிப்பு ரூ.18 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சந்திரபாபு நாயுடு பேரன்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆண்டுதோறும் தன் சொத்துகணக்கை வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பை சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேஷ் வெளியிட்டார். அதன்படி சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 81.83 கோடி ஆகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 12.55 கோடி அதிகம். இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு மட்டும் ரூ.8.30 கோடிக்குச் சொத்து உள்ளது. அவருக்குக் கடன் ரூ. 5.31 கோடி உள்ளது. 

சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஷ்வரிக்கு ரூ.31.01 கோடி சொத்து உள்ளது. இவருக்கு ரூ.22.25 கோடி கடனும் இருக்கிறது. ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள நரா லோகேஷ் ரூ.21.40 கோடிக்கு சொத்து வைத்துள்ளார். கடந்த ஆண்டு இவரின் சொத்து மதிப்பு ரூ.15.14 கோடியாக இருந்தது. லோகேஷின் மனைவி பிரமினியின் சொத்து மதிப்பு ரூ.15.01 கோடியில் இருந்து 7.72 கோடியாகச் சரிந்துள்ளது. அதேவேளையில் பிரமினியின் கடன் ரூ.36.14 கோடியில் இருந்து 5.66 கோடியாகக் குறைந்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பேரன் நரா தேவனேஷ் பெயரில் ரூ.18.71 கோடிக்குச் சொத்து உள்ளது. 

நாட்டிலேயே அதிக சொத்து கொண்ட முதல்வராக சந்திரபாபு நாயுடு அறியப்பட்டிருந்தார். டெல்லியைச் சேர்ந்த ஜனநாயக மறுசீரமைப்பு என்கிற அமைப்பு சந்திரபாபு நாயடுவின் மொத்த சொத்து மதிப்பு  ரூ.177 கோடி என்று அறிவித்திருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க