இந்தியாவில் அதிக ஊதியம் கொடுக்கும் நகரம் எது? - லிங்க்டு இன் சர்வே சொல்லும் ஆச்சர்ய முடிவு! | bengaluru pays the highest salaries in india says linkedin survey

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (23/11/2018)

கடைசி தொடர்பு:09:20 (23/11/2018)

இந்தியாவில் அதிக ஊதியம் கொடுக்கும் நகரம் எது? - லிங்க்டு இன் சர்வே சொல்லும் ஆச்சர்ய முடிவு!

அதிகம் ஊதியம் பெறும் நகரங்களின் பட்டியலில் சென்னை ஐந்தாவது இடம் பெற்றுள்ளது.

ஊதியம்

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இணையதளமான லிங்க்டு இன், சமீபத்தில் சர்வே ஒன்றை நடத்தியது. இந்தியாவில் உள்ள மொத்த நகரங்களில், எந்த நகரத்தில் உள்ள மக்கள் அதிகளவு ஊதியம் பெறுகின்றனர் என்பதுதான் அந்த சர்வே. இரண்டு மாதமாக நடந்த இந்த சர்வே முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால், பெங்களூருவில் வசிப்பவர்கள்தான் அதிக அளவு ஊதியம் பெறுபவர்களாக உள்ளனர். இங்கு, சராசரியாக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பளம் பெறுகிறார்கள். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன. மும்பைவாசிகள் சராசரியாக ஆண்டுக்கு ரூ.9.03 லட்சமும், டெல்லிவாசிகள் ரூ.8.99 லட்சமும், ஹைதராபாத் வாசிகள் ரூ.8.45 லட்சமும் ஊதியமாகப் பெறுகிறார்கள். இந்தப் பட்டியலில், நமது சென்னை நகரம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் வசிப்பவர்கள் சராசரியாக ஆண்டுக்கு ரூ.6.30 லட்சத்தை ஊதியமாகப் பெறுகிறார்கள் எனக் கூறுகிறது அந்தத் தரவு. 

அதிகமாக ஊதியம் பெறுபவர்கள் எந்தத் துறை என்ற சர்வேயும் நடத்தப்பட்டது. இதில், அதிகமாக இடம்பெறுவது சாஃப்ட்வேர் டெக்கிகள் என்று நினைத்தால் அதுதான் கிடையாது. ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க் துறையில் பணியாற்றுபவர்களே அதிகபட்ச ஊதியம் பெறுகிறார்கள் என்கிறது இந்த சர்வே. இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள், சராசரியாக ஆண்டுக்கு ரூ.14.70 லட்சம் சம்பளம் பெறுகிறார்கள். அதேநேரம், சாஃப்ட்வேர் டெக்கிகள் ஆண்டுக்கு ரூ.12 லட்சமும், நுகர்வோர் துறையில் பணிபுரிபவர்கள் ரூ.10 லட்சமும் ஊதியம் வாங்குகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க