வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (24/11/2018)

கடைசி தொடர்பு:21:36 (24/11/2018)

காவிரி ஆற்றின் கால்வாயில் கவிழ்ந்த பேருந்து! - 25 பேர் பலியான சோகம் 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று சாலையோர கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து
 

பெங்களூரில் இருந்து 105 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மாண்டியா. இன்று மதியம் பாண்டவபுரா என்னும் பகுதியில் இருந்து மாண்டியாவை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 35 பேர் பேருந்துக்குள் இருந்தனர். காவிரி ஆற்றின் விசி கால்வாய் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த பெரிய கால்வாயில் கவிழ்ந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியில் விவசாய நிலங்களில் பணி செய்து கொண்டிருந்த மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகள் மேற்கொண்டனர். ஆழமான கால்வாய். எனவே பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

விபத்து
 

பல மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் மூன்று பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. 25 பேர் சடலங்களாக மிதந்தனர். அதில் 5 பேர் சிறுவர்கள்.  எஞ்சியுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் பலர் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாம்.  “பேருந்து கவிழும் போது ஒரு சிறுவன் வெளியே குதித்து தப்பித்துள்ளான். ஆனால் தற்போது அதிர்ச்சியில் இருந்து மீளாமல் எதுவும் பேசாமல் அந்தச் சிறுவன் இருப்பதால், எப்படி  விபத்து நடந்தது என்பது குறித்து அவனிடம் விசாரிக்க முடியவில்லை” என போலீஸ் தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க