வெளியிடப்பட்ட நேரம்: 01:46 (25/11/2018)

கடைசி தொடர்பு:01:46 (25/11/2018)

‘அற்புதமான மனிதர் அம்பரீஷ்’ - நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

பிரபல கன்னட  நடிகர் அம்பரீஷ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 66. கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரகக் கோளாறு மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் அம்பரீஷ் மறைவு

நடிகராக மட்டுமின்றி, அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் அம்பரீஷ். அவருடைய மனைவி சுமலதாவும் பிரபல நடிகையாவார். 

மைசூர் மாவட்டம் மாண்டியாவில் பிறந்த அம்பரீஷ், நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராவார். தமிழில் ரஜினி-ஸ்ரீதேவி நடித்த `பிரியா' படத்தில் உடன் நடித்தவர். இவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த்  ட்விட்டர் பக்கத்தில், தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில், ``அற்புதமான மனிதர் அம்பரீஷ். என்னுடைய நெருங்கிய நண்பர். அவரது இழப்பு ஈடு செய்ய இயலாதது.. இப்போது அவரை இழந்து தவிக்கிறேன். அவரது ஆன்மா அமைதி அடையட்டும்’ என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ரஜினி இரங்கல்

கன்னட திரையுலகில் நடிகர் அம்பரீஷின் மறைவு, அவரது ரசிகர்களையும் தொண்டர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.